Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முதிர்வு தொகைக்கு வட்டி கொடுக்கவில்லை” வங்கிக்கு அபராதம்…. அதிரடி தீர்ப்பு….!!!

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் கால்வின் ஜோசப் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கால்வின் ஜோசப் வங்கி கணக்கில் உள்ள முதிர்ச்சி அடைந்த பணத்தை வேறு ஒரு கணக்குக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளார். இதனால் வங்கியானது முதிர்வடைந்த தொகையை மட்டும் செலுத்தி அதற்கான வட்டி தொகையை கொடுக்கவில்லை. இதனால் வட்டி படத்தை தருமாறு கால்வின் ஜோசப் வங்கியை அணுகியும் அவர்கள் வட்டி தொகையை கொடுக்கவில்லை. இதனால் கால்வின் ஜோசப் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் கால்வின் ஜோசப் நாகர்கோவிலில் இருக்கும் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் உறுப்பினர், சங்கர் ஆகியோர் வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ஆல்வின் ஜோசப்புக்கு வங்கி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கொடுக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் வட்டி தொகை 24,000 ரூபாய் பணம் வழக்கு செலவு தொகை 5000 ரூபாய் பணம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |