NIA DIG வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் நேற்று இரவு கோவை வந்துள்ளதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கோவை வந்திருக்கக்கூடிய NIA அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் போலீசுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் ஜமேசா முபீன் என்ற ஒரு நபர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது உபா சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு NIAக்கு மாற்றப்படுமா என்ற சந்தேகமும் எழுந்திருக்க கூடிய நிலையில் NIA அதிகாரிகள் இன்று காலை கோவையில் உள்ள உள்ளூர் போலீஸ் உடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.