கேரள மாநிலத்தில் சீவிக் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கோழிக்கோட்டில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக மல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சீவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சீவிக் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சீவிக் சந்திரன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஜாமின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்ததோடு சீவிக் சந்திரனை நேரில் ஆஜராகும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சீவிக் சந்திரன் காவல் நிலையத்தில் ஆஜரானார். மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் கோழிக்கோடு செசன்ஸ் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.