Categories
மாநில செய்திகள்

திசை மாறிய காற்று…. ஓபிஎஸ் நடத்தும் போட்டி அதிமுக…. எடப்பாடிக்கு டெல்லி மூலம் அழுத்தம்…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தங்க கவசத்தை வங்கில இருந்து யார் பெற்று விழா குழுவிடம் வழக்குவது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. 90 சதவீதத்திற்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,‌ முன்னாள் அமைச்சர்கள் என பலரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கின்றனர். மிக குறைவான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். உச்சநீதிமன்ற வழக்கு ஒரு பக்கம் நிலுவையில் உள்ள நிலையில் டெல்லி மூலம் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கும் பணியை ஓபிஎஸ் சத்தம் இல்லாமல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பொது குழுவுக்கு போட்டியாக தனது தலைமையில் போட்டி பொதுக்குழுவை ஓபிஎஸ் நடத்த உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களுக்கும் மேல் இருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் எல்லாம் நிர்வாகிகளை நியமித்து போட்டி அதிமுகவையே நடத்தி வருகிறார்கள். அதன்படி தற்போது அவர் சென்னை, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். வடசென்னை, தென் சென்னை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அவை தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்கள், மருத்துவமனை செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Categories

Tech |