Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 வயது பெண் மீது 17 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் ..! நள்ளிரவில் எடுத்த அவசர முடிவு

 20 வயது இளம் பெண்ணை காதல் செய்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் குலமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர்  கூலி வேலை செய்யது வருகிறார் இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார்.

17 வயதான சேவாக்  ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அந்தப் பெண்ணும், பெண் வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் எனக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த சேவாக் அந்த  பெண்ணை சந்தித்துவிட்டு வீடு  திரும்பியுள்ளார். பின்னர்  நள்ளிரவு 12 மணி அளவில் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி பெட்ரோல் ஊற்றி  தன் மீது தீ வைத்துக் கொண்டார்.அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

80% தீக்காயத்துடன்  அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னதாக ஒருதலை காதலால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக சேவாக் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |