யுவன் சங்கர் ராஜா திரை உலக வாழ்வை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்
கடந்த 1997ம் ஆண்டு இதே தேதியில் சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. ரசிகர்களை இசையால் சந்தோஷப்படுத்திய யுவன் சங்கர் ராஜாவின் அறிமுக தேதியான இந்நாளை வருடாவருடம் ரசிகர்கள் வெகு விமர்சையாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருடத்துடன் யுவன்சங்கர்ராஜா திரையுலகில் கால் பதித்து 23 வருடங்கள் ஆன நிலையில் #23YearsofYuvanism என்ற ஹஸ்டக் மூலம் யுவன் சங்கர் ராஜாவின் படைப்பு அவருடைய திறமை குறித்து வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.