Categories
மாநில செய்திகள்

கோவையை முதல்வர் பழிவாங்குகிறாரா.‌..? திருமா, சீமான் அமைதி காப்பது ஏன்….? கொந்தளித்த வானதி சீனிவாசன்…..!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் கோட்டை ஈஸ்வரன் தான் காப்பாற்றியதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பொதுமக்கள் நன்றி செலுத்துவதற்காக சென்றனர். இந்த கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தீவிரவாத தாக்குதலின் பெரும் அசம்பாவிதம் இறைவன் அருளால் தடுக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் இறைவனுக்கு நன்றி சொல்வதற்காக வந்துள்ளோம். கோயம்புத்தூரில் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும் சமயத்தில் பெரிய தலைவர்கள் யாருமே இங்கு வந்து பார்க்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் கூட கோவை வெடி விபத்து குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது. முதல்வர் கோவையை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் உளவுத்துறையா னது முற்றிலுமாக செயலிழந்து விட்டதால் விசாரணையை  உடனடியாக தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் முதல்வர் கவுரவம் பார்க்க கூடாது. கோவை வெடி விபத்தில் தேசிய அளவில் தொடர்பு இருக்கிறது. எனவே தமிழக காவல்துறையால் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள முடியாது. கோவை மாநகரை காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இன்று மாலை தகவல் வெளியிடப்படும். மைனாரிட்டி மக்கள் கொடுத்த பிச்சை என்று பேசக்கூடிய நபர்கள் தான் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள்.

மைனாரிட்டி மக்கள் ஓட்டு போட்டதற்காக அனைத்து மக்களின் உயிரையும் பலி கொடுக்கலாம் என்ற முடிவுக்கு முதல்வர் வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களை வெளியே விட வலியுறுத்தி அனுப்பப்படும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அனைவருமே இந்த விஷயத்தில் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள். மேலும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கோவைக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |