ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களை அச்சிடலாம் புது ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் படமும் மற்றொரு பக்கம் இரண்டு தெய்வங்களின் படமும் இருக்கக்கூடும். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் அச்சிட பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
கரன்சி நோட்டுகளில் லட்சுமி விநாயகர் புகைப்படம் இருந்தால் நம் நாடு செழிக்கும் பொருளாதாரம் முன்னேறும் இது பற்றி ஓரிரு நாட்களில் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் ரூபாயில் விநாயகர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது அவர் சுட்டிக் காட்டியுள்ளார் இந்தோனேசியாவால் முடியும் என்றால் ஏன் இதை நம்மால் செய்ய முடியாது புகைப்படங்களை புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இந்தியா பணக்கார நாடாக வேண்டும் இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். மேலும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் பெரிய அளவில் திறக்க வேண்டும் என கூறியுள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி முழுமையாக தயாராக இருப்பதாகவும் தேசிய தலைநகர் மக்கள் பாஜகவின் நிராகரிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியை புது தூய்மையான காற்று கொண்ட நகரமாக மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.