Categories
மாநில செய்திகள்

ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறைக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நேற்று சீனாவில் சிக்கியிருத்த 300க்கும் மேற்ட்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் அனுப்பு மீட்டு வந்தனர்.

அதே போல ஈரான் நாட்டிலும் இந்தியாவைச் சேர்ந்த 450 பேர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரானில் இருக்கும் 450 பேரில் 300 பேர் தமிழர்கள் என்றும் மீன்பிடிக்கச் சென்று போது அவர்கள் அங்கே சிக்கிக் கொண்டதாகவும், பல்வேறு நாடுகளில் விமானம் ரத்து செய்யப் பட்டுள்ளதால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார். இதனிடையே ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கொரோனா தாக்குதலால் ஈரானில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |