Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது முதல்முறையா.! பவுலர்களை கண்டு ஏன் பயப்படுறீங்க ராகுல், ரோஹித்…. துவக்க பேட்டர்களை விமர்சித்த அக்தர்.!!

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விமர்சித்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த முக்கியமான ஆட்டத்தில் இரு பேட்டர்களும் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறத் தவறிவிட்டனர். ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ரோஹித்தும் அதே 4 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார், இந்தியா 3.2 ஓவர்களில் 10-2 என்ற நிலையில் தத்தளித்தது. 160 ரன்களைத் துரத்தும்போது, அவர்கள் உடனடியாக அவுட் ஆனதால் மிடில் ஆர்டருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது மற்றும் தேவையான ரன் விகிதம் உயர்ந்தது. அதேபோல சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேலையும் இந்திய அணி விரைவாக  இழந்தது, ஒரு கட்டத்தில், ஸ்கோர் கார்டு 6.1 ஓவர்களில் 31-4 ஆக இருந்தது.

இருப்பினும், விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாப் ஆர்டர்கள் சொதப்பிய போதும் விராட் கோலி அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார். 53 பந்துகளில் 82* ரன்கள் குவித்த கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அதே நேரத்தில் இப்படி முக்கியமான போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழந்தால் கோப்பையை வெல்வது கடினம் என்றும் ரசிகர்கள் ராகுல், ரோஹித் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எட்டக்கூடிய இலக்கை பாசிட்டிவ் மைண்ட் செட்டில் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் அடித்து பெரிய சாட்டிற்கு போய் ஆட்டமிழந்தால் கூட பரவாயில்லை. இப்படி தடுத்து ஆடி பயந்து அவுட் ஆவது போல ஆடுவது ரசிகர்களை கோபமடைய செய்கிறது..

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் ரோஹித் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் தவறியதற்காக விமர்சித்தார். போட்டியின் போது இருவரின் கூடுதல் எச்சரிக்கையான அணுகுமுறையை அவர் விமர்சித்தார்.

இதுகுறித்து தன்னுடைய யுடியூப் சேனலில் சோயப் அக்தர் கூறியதாவது, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிரட்டப்பட்டு பயப்படுகிறார்கள். ஒரு கேப்டனாக ரோஹித் அமைதியாக இருக்க வேண்டும், அவரது பேட்டிங் அதன் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. கே எல் ராகுல் கூடுதல் கவனம் செலுத்தும் அணுகுமுறையால் சிக்கிக் கொள்கிறார், அவர் அவ்வாறு செய்யக்கூடாது” என்று கூறினார்.

அக்தர் சொல்வது போலவே இது முதல் முறை அல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங் ஆடும்போது தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 0, கே எல் ராகுல் 3 என சொற்பரன்களில் இதேபோல ஆட்டமிழந்தனர். இதனால் அணி தடுமாறும்போது அப்போதும் இதே விராட் கோலி தான் 57 ரன்கள் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டு 151 என்ற ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். ஆனாலும் அந்த போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது, ​​கோஹ்லி வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை அடித்தார், இதனால் தான் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.. முன்னாள் கேப்டன் ஆட்டமிழக்காமல் இருந்தார் மற்றும் கடைசி ஓவர் த்ரில்லர் வெற்றி பெற்றது இந்தியா ..

அக்டோபர் 27, வியாழன் அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும்  போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது ரோஹித் சர்மா படை..

Categories

Tech |