Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை தினத்தில்…. பட்டாசு வெடித்த 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

தீபாவளி பண்டிகை கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெடச்சந்தூர் குஜிலியம்பாறை, ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வடித்த நான்கு பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |