நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு pm-kisan ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தில் பலரும் முறைகேடாக பணம் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பயனடையும் மக்களுக்கான தகுதிகளை மத்திய அரசு தற்போது வகுத்துள்ளது. அரசின் இந்த வரைமுறைகள் இல்லாதவர்கள் ஏற்கனவே பயன் அடைந்திருந்தால் அந்த தொகையை உடனடியாக அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும். குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் அரசுக்கு வரி செலுத்தி வருபவர்களாக இருந்தால் அவர்களும் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் . மற்றவர்களின் நிலத்தில் விவசாய வேலை செய்பவர்கள் மற்றும் விவசாய நிலத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்துபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
விவசாய நிலங்களின் பெயரில் பதிவு செய்யப்படாதவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அல்லது அமைச்சர் மற்றும் மந்திரி பதவிகளில் இருந்த விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. குறிப்பாக அரசின் மற்ற தொழில்முறை துறைகளில் பதிவு செய்து பணியாற்றுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலனை பெற முடியாது எனவும் இவ்வாறு வரைமுறைகளை மீறி பணத்தை பெற்றவர்கள் உடனே அரசிடம் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.