Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டம்… “மக்கள் நல வாழ்வு துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு”….!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்த திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் தோறும் அவர்களின் வீட்டிற்கு சென்று மருத்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பேரிடர் காலகட்டத்தில் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகளை வாங்குவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலமாக வீடு தேடி மாத்திரைகளை வழங்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்து வருகிறது. இது பற்றி தேசிய மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மக்களை தேடி மருத்துவம் திட்டம் உலகிற்கே வழிகாட்டியாக இருக்கிறது தற்போது ஸ்விட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றம் நடைபெற இருக்கிறது. அதில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றி விளக்க என்னை அழைத்து இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |