திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அண்ணன் சேகருபாபு அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு நிகழ்வை செய்து கொண்டிருக்கிறார். இன்று நாங்கள் சேகர்பாபு அண்ணனை பாராட்டுகிறோம்.
அவர் எங்களை பாராட்டுகிறார் என்று சொன்னால், இந்த ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரர் யார் என்று சொன்னால் ? இன்றைக்கு இந்த கூட்டத்தினுடைய கதாநாயகனாக என்றைக்குமே விளங்கிக் கொண்டிருக்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தான். சும்மாவே கிழக்கு மாவட்டம் கொண்டாடும். இதில் 2-வது முறையாக நம்முடைய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று என்றால் சொல்லவே வேண்டாம்.
அந்த கொண்டாட்டத்தினுடைய ஒரு பகுதி தான். பேப்பரை பார்த்தேன் நானு. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் விடுமுறைக்கு எல்லாம் ஊருக்கு போய் விட்டார்கள் என்று, நம் ஊர்க்காரர்கள் யாரும் இங்கே இருப்பதில்லை, எல்லாரும் வெளியூர் காரர்கள் தான், வந்தாரை வாழவைக்கின்ற சென்னை மாவட்டம் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை. இரண்டு லட்சம் பேர் போய்விட்டார்கள் என்று சொல்லும்போது, இன்னிக்கும் இந்த கூட்டத்தை நான் பார்க்கிறோம் என்று சொன்னால்,
நீங்கள் தான் உண்மையான சென்னையின் உடைய பிள்ளைகள். சென்னையோட பிள்ளைகள் என்று சொல்வதைக் காட்டிலும், நவீன தமிழகத்தினுடைய தந்தையாக விளங்கக்கூடிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய பிள்ளைகள் யார் என்று சொன்னால், அது இங்கே அமர்ந்திருக்கின்ற நீங்கள் தான். அப்படி அந்த உரிமையோடு உங்கள் முன்பு நாங்கள் உரையாடுகின்ற அந்த வாய்ப்பு கிடைக்கும் போது எங்களுக்கு மிகப்பெரிய ஒரு சந்தோஷம்.
சட்டமன்றத்தில் நாங்கள் வந்து உரை நிகழ்த்துகிறோம் என்று சொன்னால், சட்டமன்றத்தில் நாங்கள் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருப்பதே இந்த மக்கள் மன்றம் தான் என்பதை நன்றியோடு நாங்கள் நினைவு கூறுகின்ற ஒரு இடமாகத்தான் இந்த இடத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.