இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரியான ஆஷிஷ் ஜா இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால் தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது . மேலும் உலகின் முக்கியமான தடுப்பூசி உற்பத்தியாளர்களாக இந்தியா உள்ளது என அவர் கூறியுள்ளார்.