கன்னட சினிமாவில் இயக்குனர் ஜெயதீர்த்தா இயக்கத்தில் புதுமுக நாயகனான ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பனாரஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் தேவராஜ், பர்கத் அலி, சப்னா ராஜ், சுஜய் சாஸ்திரி அச்சீத் குமார், மற்றும் பல நடித்துள்ளனர்.
அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் அமானுஷ்ய விஷயங்களுடன் கூடிய காதல் படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
இதனையடுத்து, இந்த பட விழாவில் பேசிய ஜையித்கான், இந்த தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அதன்படி, அவரை இழிவுபடுத்தும் செயலை நான் எப்போதும் செய்ய மாட்டேன் என உறுதி அளிப்பதாக கூறினார். மேலும், இந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது. இந்த படத்திற்கு நான் மிகவும் உழைத்துள்ளேன்.
இயக்குனர் ஜெயதீர்த்தா ஒரு அற்புதமான படைப்பை உருவாகி இருப்பதாக கூறியுள்ளார். மேலும், மக்களின் இதயங்களை இந்த படத்தின் மூலம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்த்து என்னை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறினார்.