நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகும் நிலையில், நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம் என சமூகவலைதள பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதாவது, வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றது தெரியவந்தது. இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு 2016 மார்ச் 11ஆம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. நயன்-விக்கி 2022 ஜூன் மாதம் ஊரறிய திருமணம் செய்த நிலையில், வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில் அவர்களின் திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அவர்களின் குழந்தை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.