பிரபல நாட்டில் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளித்த பெண் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரான் பகுதியில் தபார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளிக்கும் படங்களை வெளியிட்டார். இதன் மூலம் புகழடைந்தார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஈரானில் மற்ற 3 இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் சேர்த்து தபார் கைது செய்யப்பட்டார். இவர் தன்னை ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் மாற்றிக்கொள்ள 50-க்கும் மேற்பட்ட அறுவகை சிகிச்சைகள் செய்துள்ளார். மேலும் மேக்கப் மற்றும் அறுவகை சிகிச்சை மூலம் தனது தோற்றம் பெரும்பாலும் பயங்கரமானதாக மாறியது என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையான அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மேக்கப் மற்றும் தந்திரங்கள் மூலம் எனது ஜாம்பி தோற்றம் வெளியானது என்றும், அது அறுவை சிகிச்சையின் விளைவாக இல்லை. மேலும் நான் எப்போதும் புகழுடன் இருக்க விரும்பியதால் இதை செய்தேன். ஏனென்றால் ஒரு நடிகராவதை விட இது மிகவும் எளிதாக தான் இருந்தது. இனி என் போனில் இன்ஸ்டாகிராம் கூட வைக்க மாட்டேன். இனி இன்ஸ்டாகிராமிற்கு திரும்ப விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.