தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கீஸ்வரன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரங்கீஸ்வரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களான பிரவீன் குமார், அருண்குமார், அன்பன், ராம்கிஷோர் ஆகியோருடன் ரங்கீஸ்வரன் காரில் நாட்டானி கிராமம் முதலை முத்து வாரியில் இருக்கும் அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நாட்டானி பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததால் நிலைதடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரங்கீஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த ராம் கிஷோர், பிரவீன் குமார் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.