Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்ம நபர்கள்”…. போலீசார் வலைவீச்சு….!!!!

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ணாடி டேபிள் மேல் வைத்து பட்டாசு வெடித்துவிட்டு தப்பி சென்று விட்டார்கள்.

இதனால் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்த வழக்கில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |