Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் நிறுவனத்தில் வேலை! 

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் (Electronics Corporation of Tamilnadu limited – ElCOT) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி : மேலாளர் – 02 , 

சம்பளம்: மாதம் ரூ. 59,300 – 1,87,700

தகுதி: CA, ICWA  முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள் : இணை மேலாளர் II (சட்டம்) – 01, இணை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) –  04

தகுதி : பொறியியல் துறையில் டிப்ளமோ, சட்டத் துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: மாதம் ரூ. 56,100  -1,77,500

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி  வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேலாளர் பணிக்கு GT, SC(A) பிரிவினர் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், GT பிரிவினர் அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும், SC(A) பிரிவினர் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இதே போன்று, இணை மேலாளர் II பணிக்கு SC, MBC/DC, BC(OBCM), BCM பிரிவினர் குறைந்தபட்சம் 30 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.elcot.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதவ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Managing Director,
Electronics Corporation of TamilNadu Limited,
MHU Complex, II Floor, 692,
Anna Salai,
Nandanan,
Chennai – 600 035

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://elcot.in/index/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

கடைசி தேதி: 11.03.2020

Categories

Tech |