தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, இன்னும் உள்துறை பற்றி ஒரு படி மேலே போய் சொன்னோம் என்றால் ? உள்துறையில் இருக்கக்கூடிய DSP எல்லாருமே ஒரு மதத்தை சார்ந்தவர்களாக… 60 சதவீதத்திற்கு மேலாக இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் உள்துறையின் டிஜிபி மேல, ஏடிஜிபி மேல நிறைய புகார்கள் வருகின்றது.
லாவண்யா கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு, கள்ளக்குறிச்சியினுடைய விவகாரம் வரை, சவுத் தமிழ்நாட்டில கன்வர்ஷன்ல இருந்து பல விஷயங்கள் உள்துறையினுடைய வேலை… ஒரு என்.ஜி.ஓ-வும், மிஷனரியும் செய்கின்ற வேலையை உள்துறை செய்து கொண்டிருக்கின்றது. அதனால் அடுத்து மறுபடியும் பாம் வெடிக்கணுமா ? இன்னொரு இறந்த தான் முதலமைச்சர் கண்ணை திறந்து நம் உள்துறையில் தோற்றுவிட்டது, இன்டெலிஜென்ஸ் தோத்துவிட்டது.
இந்தியாவிலேயே மோசமான உள்துறை நம்முடைய கையில் இருக்கு என முதலமைச்சர் ஒப்புக் கொள்வதற்கு இன்னும் எவ்வளவு நாள் வேணும் ? இப்போதாவது கெஞ்சு, விரும்பி கேட்டுக் கொள்கின்றோம். உங்க பழைய டிஎம்கே ஆட்சியில் உள்துறைல சிறந்த மனிதர்கள் இருந்தார்கள்.
பழைய எடிஎம்கே ஆட்சியில் உள்துறையில் சிறந்த மனிதர்கள் இருந்தார்கள். அந்த ப்ரொபஷனலை மறுபடியும் கொண்டு வாங்க. ஏடிஜிபி – எஸ்பி இன்டெலிஜென்ஸ், பொலிடிகல் இன்டெலிஜென்ஸ், கவுண்டர் டெரரிசம் இன்டெலிஜென்ஸ் எல்லாத்தையும் கொண்டு வாங்க. திரும்பவும் ரீ போஸ்டிங் பண்ணுங்க என தெரிவித்தார்.