Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்ல இல்ல… இதுலாம் தப்பு..! அவசரப்படாதீங்க… கிளாஸ் எடுத்த டி.ஜெ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேவர் தங்க கவசம் வழக்கில் விவாதங்கள் எல்லாம் முடிவுற்றது. கோர்ட்ல இருக்கு. இந்த விஷயத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருக்கு. மூணு மணிக்கு வருது. அதனால அவசரம் வேண்டாம். 3 மணிக்கு மேல என்கிட்ட கேளுங்க, நான் சொல்றேன் என தெரிவித்தார்.

உடனே செய்தியாளர்தங்க கவசம் ADMKவசம் வாராது என்பதால் எடப்பாடி பசும்பொன் போறதை தவிர்த்துவிட்டார் என கேள்வி எழுப்பிய போது, இல்ல இல்ல… இதுலாம் தப்பு.. அனுமானதுல பேசாதீங்க.  ஜட்ஜ்மெண்ட் வரல, ஜட்ஜ்மெண்ட் மூணு மணிக்கு வருது. எங்க சைடு விவாதம் முடிஞ்சது. நாங்க தான் கட்சி,  எங்களுக்கு தான் அந்த உரிமை இருக்கு அப்படின்னு சொல்லி எல்லா விதமான டாக்குமெண்ட்ஸ் கொடுத்துட்டோம்.

இதுக்கு மேல கோர்ட்டு தான் முடிவு பண்ணனும். 3 மணிக்கு தீர்ப்பு கொடுப்பாங்க. அதுக்கு அப்புறம் சொல்றேன். கோர்ட் தீர்ப்புக்கு முன்னாடி அனுமானத்தின் அடிப்படையில் எதுவும் சொல்ல முடியாது. நாம பொறுப்புள்ள பத்திரிக்கையாளர் நாம கேட்கிற கேள்வி ஆக்கபூர்வமாக இருக்கணும். நான் உங்களை தப்பா சொல்லல என செய்தியாளருக்கே பாடம் எடுத்தார்.

Categories

Tech |