திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லாரும் சொன்னாங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார், வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார் என்று சொன்னார்கள். அவர் விட்டுட்டு சென்றது, வெற்றிடம் அல்ல, அவர் விட்டு சென்றது சரித்திரம்.
அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு தலைவர் யார் என்று சொன்னால் அது நம்முடைய தளபதியார் தான் என்று இன்று ஒட்டுமொத்த நாடே.. ஏன் ? இன்றைக்கு உலகமே ஒத்துக்கொண்டிருக்கிறது. ஒரு மூன்று நாட்களுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் உரையாற்றினர், நாம் ஆட்சி பொறுப்புக்கு ஏற்ற பிறகு 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை தேடி வருகை தந்திருக்கிறார்கள் என்று சொல்லும் போது…
இதெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீதும், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மீதும் இருக்கின்ற ஒரு நம்பிக்கை. ஒருவர் சாலையோரம் அடிபட்டு ரத்தக்கரையுடன் இருந்தார். அவரை அழைத்துச் சென்று ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பிறகு தன் வேலையை பார்க்கிறார். அவர் நினைத்தால் போனில் தொடர்புக்கு கொண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேருங்கள் என்று அதிகாரிகளிடம் சொல்லி இருக்கலாம். அந்த மனசு இருக்கே, எந்த தலைவர்களுக்கும் இல்லாத மனசு, நம்முடைய தலைவருக்கு உண்டு என தெரிவித்தார்.