தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரடியாக நடந்து 565 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் இதனை மாணவர்கள் https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories