தமிழகத்தில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டி உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவியக் காட்சி கூட்டத்தின் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் சிறந்த 15 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு படைப்பு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் போட்டி குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கும் இந்த இணையதளத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களை 044-225429 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிந்துகொள்ளலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது