Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை”… இணையதளம் மூலம் பழகிய இளைஞர்… சிறையில் அடைப்பு….!!!!!

சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர்  கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற இளைஞர் தனக்கு இணையதளம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக தெரிவித்தார்.

மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதன்பின் வெளியே செல்லலாம் எனக் கூறி துரைப்பாக்கத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று என்னுடன் பாலியல் உறவு கொண்டார். பலமுறை இதுபோல பாலியல் உறவு கொண்ட ராகுல் சிராஜ் என்னிடம் தனது குடும்ப கஷ்டத்தை கூறி தொழில் தொடங்குவதற்காக 10 லட்சம் வேண்டும் என கேட்டு பெற்றுக் கொண்டார்.

ஆனால் தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கின்றார். இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல் சீராஜை தேடி வந்த நிலையில் அவர் தனது மாமா வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

 

Categories

Tech |