Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்… புகழ்ந்து தள்ளிய பாஜக அண்ணாமலை….‌!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலுக்கான முயற்சி என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதோடு கோவையில் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது எதற்காக? கோவைக்கு நேரில் வராதது எதற்காக? என பாஜக சரமாறி கேள்விகளை எழுப்பி வந்தது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்  நடை பெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கோவை கார் விபத்து தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கோவையில் நடந்த விபத்துக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை தற்கொலைப்படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியதை தமிழக பாஜக வரவேற்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் பதவியேற்கும்போது அனைத்து தரப்பிலிருந்து ஆலோசனைகளை பெற்று அரசை வழி நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தீர்கள். எனவே மேற்குறிப்பிட்டுள்ள ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். மேலும் தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |