Categories
மாநில செய்திகள்

முட்டை, காய்கறி விலை கிடு கிடு உயர்வு…. மக்களுக்கு சற்று ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகையை ஒட்டி தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட சில வகை காய்கறிகள் விலை உயர்ந்தது. தற்போது தீபாவளி முடிவடைந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல உயிருடன் கறிக்கோழி விலை 105 ஆகவும், முட்டை கோழி விலை 99 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |