பெண்கள் சில விஷியங்களை அறிந்து கொள்ளுங்கள், இவைகளை பற்றி தெரிந்தால் நன்மை, முறையாக கடைபிடியுங்கள்..!
திருமணமான பெண்கள் காலில் ஒரு விரலில் மட்டும் தான் மெட்டி போடவேண்டும் இரண்டு, மூன்று மெட்டி போடவே கூடாது. நிறைய பேரு இவ்வாறு மெட்டிகள் அணிகிறார்கள், அதுபோல செய்யக்கூடாது.
இப்படி செய்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் அதுமட்டுமில்லாமல் கணவனுடைய வளர்ச்சியை உடலாக இருக்கட்டும், அல்லது அவர்களுடைய தொழிலில் வரும் வருமானமாக இருக்கட்டும், கணவனின் வளர்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெண்கள் கோலம் போடும் பொழுது எந்த திசையும் கவனிக்காமல் தான் போடுவார்கள். ஆனால் இனி எப்போதும் தெற்கு பார்த்த மாதிரி போடாதீர்கள்.
கர்ப்பமான பெண் உக்கிர தேவதைகள் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் கிழக்கு திசையை நோக்கிதான் குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கும் இடையில் வைக்க வேண்டும். உச்சந்தலையிலும் வைக்க வேண்டும்.
அம்மாவாசை அல்லது வீட்டில் இறந்தவர்களுக்கு திவசம் செய்யும் தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போட கூடாது. பெண்கள் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது. பெண்களுடைய மார்பு பகுதி பூமியில் படக்கூடாது, அதனால் பெண்கள் அங்க பிரதட்சணம் செய்யக்கூடாது.
நிறைய பெண்கள்செய்யும் தவறு, கோவிலில் துளசியை பிரசாதமாக கொடுப்பார்கள். அந்த துளசியை தலையில் வைத்துக் கொள்வார்கள், ஆனால் எக்காரணத்தை கொண்டும் பிரசாதமாக தரக்கூடிய துளசியை தலையில் வைக்கக்கூடாது.
இப்பொழுது நிறைய பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது இல்லை, அப்படி பூசினாலும் அழகுக்காக மட்டுமே பூசுவார்கள். ஆனால் மஞ்சள் ஒரு மங்களகரமான விஷயம் ஆகும். எப்பொழுதுமே பெண்கள் இவ்வாறு குளிப்பதனால் உடலுக்கும் நன்மை.
வீட்டு பூஜை அறையில் விளக்கை பெண்கள்தான் ஏற்றவேண்டும். எப்பொழுதுமே விளக்கை அணைக்கும் பொழுதும் பெண்கள் மட்டும்தான் அணைக்க வேண்டும். ஆண்கள் விளக்கு ஏற்றவும் கூடாது, விளக்கு அணைக்கவும் கூடாது.
சாமி கும்பிடும் போது வீட்டில் எப்போதெல்லாம் மணி அடித்து கற்பூர ஆரத்தி காட்டுகிறோமோ அப்போதெல்லாம் கடவுளுக்கு நெய்வேத்தியம் வைத்து இருக்க வேண்டும். அதாவது ஒரு சின்ன கற்கண்டு அல்லது உலர் திராட்சை, பேரிச்சம் பழம், சர்க்கரை இதுபோல ஏதாவது ஒன்று இருக்கக்கூடிய பொருட்களையும் கூட நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.
கண்டிப்பாக மணி அடித்து, கற்பூர ஆரத்தி காட்டும்போது சாமிக்கு இனிப்பு நைவேத்தியம் படைக்க வேண்டும். அதைப்போல நம் வீட்டில் ஏதாவது பூஜை செய்யும்பொழுது தெற்கு பார்த்தபடி உட்காரக் கூடாது மற்ற எந்த திசையை நோக்கியும் உட்கார்ந்து பூஜை செய்யலாம்.