Categories
மாநில செய்திகள்

ஆதார் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிப்பது இனி ரொம்ப ஈசி…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆதார் சேவைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்ய இந்திய குடிமக்களை அனுமதி அளிக்கிறது. ஆதார் சேவை குறித்த பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் அழைப்பு, மின்னஞ்சல் அல்லது ஆதாரின்‌ அதிகாரப்பூர்வமான இணையதள மூலம் புகார்களை பதிவு செய்யக்கூடிய வழிமுறைகளை UIDAI உருவாக்கி கொடுத்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் 1947 என்கின்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்‌. UIDAI அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் சேவைகள் குறித்து புகார்களுக்கு விரைவில் பதில் தரக்கூடிய ஒரு அம்சம் தான் சாட் போட். இது UIDAI இணையதளத்தில் முதன்மை பக்கத்திலும் வலது கீழே உள்ள குடியுரிமை போர்டலிலும் கிடைக்கிறது. இதில் ஆஸ்க் ஆதார் என்னும் நீல நிற ஐகானை கிளிக் செய்வதன் மூலம் சாட்போட் உடன் தொடர்பு கொள்ளலாம். இது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஆதரிக்கிறது.

அதனை தொடர்ந்து UIDAI இணையதளத்தில் புகாரை ‘பதிவு செய்’ பிரிவின்கிழ் புகார் அளிக்கலாம். இதற்காக மக்கள் தங்கள்‌14 இலக்க பதிவு ஐடி மற்றும் தேதி மற்றும் நேரத்தை dd/mm/yy மற்றும் HH:mm:ss) வடிவத்தில் டைப் செய்ய வேண்டும். மேலும் அதில் தனிப்பட்ட விவரங்களான பெயர், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும். லொகேஷனில் பின்கோடு நிரப்ப வேண்டும் மற்றும் கீழே நீங்கள் வசிக்கும் கிராமம்/ நகரம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு புகாரின் வகை போன்ற தகவல்கள் தேர்ந்தெடுத்து நிரப்ப வேண்டும். ஆதார் சேவைகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தகவலை பெறலாம். இதனையடுத்து ஆதார் தொடர்பான புகார்கள் அல்லது புகார்களை சமர்ப்பிப்பதற்கான கார்டுதாரர்கள் வசிக்கும் மாநிலத்திற்கு ஏற்ப அந்தந்த அலுவலகம் சென்று புகாரை தெரிவிக்கலாம். மேலும் மக்கள் தபால் மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம். ஆதார் குறித்த புகார்களை தெரிவிக்க UIDAIஸதலைமையகங்கள் அல்லது ஆர்.ஓ.களில் அஞ்சல்/ ஹார்ட் காப்பி மூலம் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |