இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் டிரோன்கள்அத்துமீறி நுழைகிறது. பாகிஸ்தானில் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள், ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை தங்கள் தரப்பில் நாசவேலைகளை அரங்கேற்றுகிறவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் போட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கான வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்தது. அதன் படி காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அக்குவா ஜாமர்கள், மல்டி ஷாட் கன்கள் என்று அழைக்கப்படுகின்ற அதிநவீன துப்பாய்கள் போன்ற தளவாடக்கிகள் ராணுவம் நிறுவி உள்ளது. இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியது, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் நவீன மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலம் ஆயுதங்களை அனுப்பும் பாகிஸ்தானின் சதிக்கு பதிலடியாக அக்குவா ஜாமர்களும் மல்டி ஷாட் துப்பாக்கிகளும் அமையும். தற்போது இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை போடுகின்ற பாகிஸ்தானின் சதியை இந்தியா பலமுறை முறியடித்துள்ளது. அதனை தொடர்ந்து பறந்து வந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அவற்றிலிருந்து ஒட்டும் குண்டுகளையும், இ.ஐ.டி. என்ற நவீன வெடிக்கும் சாதனங்களும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த அக்குவா ஜாமர்களை பொறுத்தவற்றில் அவை நான் 4900 மீட்டர் தொலைவிலேயே டிரோன்கள் நடமாட்டத்தை கண்காணிப்பது மட்டுமில்லாமல், அவற்றின் செயல்பாட்டையும் முடக்கும் திறன் கொண்டுள்ளது. பாகிஸ்தான் எந்த வடிவில் இந்தியாவிற்குள் ஆயுதங்களை கடத்தி தாக்குதலுக்கு சதி செய்தாலும், அவை எல்லாவற்றையும் இந்திய ராணுவம் அதிநவீன கருவிகளை பொருத்தி முறியடிக்கும். இதனையடுத்து டிரோன்களை கூட்டு வீழ்த்தும் ஆற்றல் மல்டி -ஷாட் துப்பாக்கிகளுக்கு உண்டு. ட்ரோன்கள் நடமாடத்தை அக்குவா ஜாமர் கண்டறிந்த உடனேயே இந்த மல்டி ஷாட் துபாய்களை கொண்டு சுட்டு வீழ்த்தி விடமுடியும். பிரத்யோக வடிவமைக்கப்பட்ட கண்காணிப்புக்கு மையங்கள் அதிநவீன பி.டி.இசட் கேமராக்கள், தெர்மல் இமேஜ்கள் என அதிநவின தளவாடங்கள் எல்லையில் மேற்கொள்ளப்படுகிற ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் பூகோள சூழல்களை சாதகமாக எந்த விஷம் செயல்களையும் பாகிஸ்தான் செய்யவில்லை. மேலும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நவீன தளவாடங்களை நிறுவிய நிலையில், இதனைப் போல தளவாடங்கள் சர்வதேச எல்லைப் பகுதியில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இதனால் பாகிஸ்தானில் டிரோன் ஆயுத கடத்தல் சதியை முறியடித்து விடலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.