உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் கைகளை கழுவுவதற்கு உபயோகப்படுத்தப்படும் தொட்டியை எடுத்துச் சென்று ஆச்சர்யமடைய வைத்திருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து நிறுவனத்தை வாங்க தயாரானார்.
ஆனால், அந்நிறுவனம் போலியான கணக்குகள் பற்றிய தகவல்களை தர மறுத்த காரணத்தால் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த முடியாது என்று எலான் மஸ்க் கூறினார். இதற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், நீதிமன்றம் வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதிக்குள் இந்த ஒப்பந்தத்தை எலான் மஸ்க் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது.
அதன்படி எலான் மாஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் ட்விட்டர் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடிக்க வேண்டும் இல்லையெனில் சட்டரீதியாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்பட்டது.
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022
இந்நிலையில் சான்ப்ரான்ஸிஸ்கோ நகரில் இருக்கும் ட்விட்டர் தலைமையகத்திற்கு எலான் மஸ்க் சென்றுள்ளார். அங்கு அவர் கைகளை கழுவ உபயோகப்படுத்தப்படும் ஒரு தொட்டியை எடுத்துச் சென்றிருக்கிறார். மேலும் ட்விட்டரில், அந்த வீடியோவை வெளியிட்டு அதை முற்றிலுமாக புரிந்து கொள்ளட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஆனதை வெளிக்காட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.