மீனம் ராசி அன்பர்களே..! இன்று தயவுசெய்து குடும்ப விஷயத்தை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். ரகசியங்களை ரொம்ப முக்கியமாக பாதுகாக்கவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவு நேரங்களில் கொடுக்கல், வாங்கல் வேண்டாம். இன்று பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலைகள் நீங்கும்.
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும் என்பதில் காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. இன்று உற்றார் உறவினர்களிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். செலவும் கொஞ்சம் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். செலவைக் கட்டுப்படுத்தி விட்டால் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கிறது. திருமண முயற்சியில் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இந்த நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்