Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.. வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரிடம் கேட்ட உதவிகளை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் பன்மடங்காக உயரும். ஒருவித சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.. மன குழப்பம் நீங்கி படிப்பிலும் இன்று வாழ்க்கையிலும்  மகிழ்ச்சி ஏற்படும்.

குடும்பத்தில் அமைதி நிலவும், விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் நாளாகவே இருக்கும். ஆன்மீகத்தில்  செலவிடக் கூடிய சூழலும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். மாற்று கருத்துடையோர் மனம் மாறி உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு நீடிக்கும்.

காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கிறது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும், இதை வாரவாரம் செய்வதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை

Categories

Tech |