Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! ஹெல்மெட் அணிய வில்லையா….? தொடங்கியது அபராத வேட்டை…..!!!

விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை அதிகரித்துள்ளது. அதை மாநில அரசுகளும் அமல்படுத்தியுள்ளன. அதன்படி சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகன ஓட்டிகளோடு போலீசார் வாக்குவாதம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், ஒரு சில வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு அறிவுரை சொல்லி உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டது. சாலைகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள். இவர்களும் ஹெல்மெட் அணிந்தால் கட்டாயம் விபத்துக்கள் குறையும். அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல. அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டாயம் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |