தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் நேற்று முதல் அமலானது. சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த சூழலில் ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசரும், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அமர்ந்து சென்றது சர்ச்சையாகியுள்ளது. சாமானியர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அமைச்சருக்கு கிடையாதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.