ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாய் நிலைபடுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் பிர்க்கா அளவில் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்க்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். சம்பா நெல் பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.554.25 செலுத்த வேண்டும்.
இதனையடுத்து கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மையமாமைக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பிறகு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கடன் பெற விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்று கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்கம் ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.