Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள்…. “புள்ளிங்கோ ஸ்டைல்” தலைமுடியை வெட்டிய போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(20) என்ற மகன் உள்ளார். இவரும் சுபாஷ் சந்திரபோஸ்(22) என்பவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்நிலையில் அருண்குமாரும், சுபாஷ் சந்திரபோஸும் பாலக்கரை பகுதியில் பட்டாகத்தி மற்றும் உருட்டு கட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து பட்டாகத்தி மற்றும் உருட்டுக்கட்டையை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து போலீசார் சலூன் கடைக்காரர் ஒருவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து புள்ளிங்கோ ஸ்டைலில் தலையில் வித்தியாசமாக வளர்த்த முடியை வெட்டினர்.

Categories

Tech |