Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு.. எதிர்பார்த்த உதவி கிடைக்கும்..முயற்சிகளுக்கு பலன் உண்டு..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். கடந்த கால முயற்சிகள் காண பலன் இன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சிறப்பாகவே இருக்கும். பெற்றோரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றார்போல் நிறைவேற்றுவீர்கள். இன்று  எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பரபரப்பு நீங்கி அமைதியான சூழ்நிலை இருக்கும். இன்று பணிகளை ரொம்ப சிறப்பாகவே கவனிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சங்கடங்கள் தீரும். இன்று அன்பு கூடும் நாளாகவே  இன்றைய நாள் இருக்கும். காதலர்களுக்கும் இன்று சிறப்பான நாளாக அமையும். மாணவச் செல்வங்கள் கல்விக்காக கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும், படித்த பாடத்தை எழுதி பார்க்கவேண்டும். சந்தேகம் இருப்பினும் தைரியமாக ஆசிரியரிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |