Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. எதிர்த்து பேசாதீர்கள்..கவனமாக செயல்படுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் கொஞ்சம் விலகி இருங்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் வந்து சேரும். உங்களுடைய உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட கூடும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்த்து விடுங்கள், ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும்.

பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கும் இன்று கடன் உதவிகளை மட்டும் செய்ய வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வி கற்கும் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

வெள்ளை நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |