கன்னி ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களால் சில பிரச்சினைக்கு நீங்கள் ஆளாக கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் இன்று போதுமானதாகவே இருக்கும். பணவரவை விட நிர்வாக செலவு தான் கூடும், பணியாளர்கள் திறம்பட சமாளிக்க கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்க கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
இன்று திடீர் கோபம் கொஞ்சம் தலைதூக்கும் யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று யாருக்கும் எந்த விதத்திலும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம், வாக்கு கொடுக்க வேண்டாம், இன்று தாய் தந்தையின் நிலையை உடலில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். மாணவச் செல்வங்கள் ரொம்ப கடினமாக உழைத்துத்தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
படித்த பாடத்தை எப்பொழுதுமே எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் நீல நிறம்