இந்தியாவில் வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் அதிகபட்ச முடிவை எடுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது நவம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் உள்நாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து நவம்பர் 30-ம் தேதிக்குள் பரிமாற்றவிலை விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டும். மேலும் இது தொடர்பான விரிவான தகவலை www.incomectaxindia.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று தெரிந்து கொள்ளலாம்.