கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேசா முபின் என்ற வாலிபர் பலியானார். இதனை தொடர்ந்து அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று ஜமேசா முபினுடைய பெரியப்பா மகன் அப்சர் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.