மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் நேர்மையான எண்ணங்கள் நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு உயரும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவீர்கள். இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம், அவ்வப்போது மனதில் திடீரென்று குழப்பங்கள் ஏற்படலாம். தாயின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்துசேரும், கவலை வேண்டாம். வியாபார பொருட்களை மற்றவரிடம் ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனமாக ஒப்படையுங்கள். மற்றவரிடம் எந்தவித பொறுப்புகளையும் கொடுத்து செய்ய சொல்லாதீர்கள். தயவுசெய்து இன்று முக்கியமான பணி நீங்களே மேற்கொள்வது ரொம்ப நல்லது. இன்று பயணங்கள் ஓரளவு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கும். மாணவச் செல்வங்களுக்கு நல்லம் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்