தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழும் சென்னையில் பல கிராம மக்களும் தற்போது தங்கள் ஊரை விட்டு கிளம்பி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1189 சதுர கிலோமீட்டரில் இருந்து 5 ஆயிரத்து 904 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு தற்போது விரிவாக்கப்பட உள்ளதால் தற்போதைய 1189 சதுர கிலோமீட்டர் உடன் கூடுதலாக 4715 சதுர கிலோ மீட்டர் பரப்பு இணைந்து 5,904 சதுர கிலோமீட்டருக்கு விரிவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதற்காக 1225 கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட உள்ளன.விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு சென்னை பெருநகர மக்கள் தொகை அளவு 1.59 கோடியாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.