தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் முக்கிய அதிகாரிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு அரசுத்துறை செயலாளர்கள் பல விஷயங்களில் நிதித்துறை அனுமதியை பெறாமல் தங்களது துறையில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது அது தொடர்பான அரசாணையில் பல திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளது. அதாவது அரசுத் துறை செயலாளர்களுக்கு அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி இனி கூடுதல் நிதி தொடர்பான வேலைகளில் நிதி துறையின் ஒப்புதலை செயலாளர்கள் பெற வேண்டிய அவசியம் இல்லை. செயலாளர்கள் பணியாளர்களுக்கு ஆறு மாதம் கால பணி நீட்டிப்பு வழங்க முடியும். அதேசமயம் அரசு விவகாரங்களில் வாதாடும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு சம்பளம் வழங்குவது,நிபுணர்களுக்கான ஊதியம் மற்றும் ஊழியர்களுக்கான முன் படம் வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்களில் செயலாளர்கள் நிதி துறையின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.