Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு.. வருமானம் உயரும்.. நண்பர்களின் உதவி கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாகவே இருக்கும். பணியாளர்களின் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது ரொம்பவே நல்லது. இன்று வெளிவட்டார தொடர்புகளை கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

இன்று நண்பர்களின் மத்தியில் உங்களுக்கு நிறைவேறக் கூடிய காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும்.காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். காதலர்களுக்கு இன்று உன்னதமான நாளாகவே அமையும். திருமண முயற்சி வெற்றி வாய்ப்புகளும் பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றமும் இன்று கிடைக்கும். பெண்களால் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். இன்று ஆன்மிக பணிகளில் நாட்டம் செல்லும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

 அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீலம் நிறம்

அதிஷ்ட திசை: தெற்கு

Categories

Tech |