Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாட்டவரை காதலிப்பதாக வைரலான தகவல்..? பிரபல நடிகை விளக்கம்…!!!!!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக புலி படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மார்க்கெட் ராஜா, எம் பி பி எஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் பின் அவர் அதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.

இந்த சூழலில் நிகிஷா பட்டேல் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் படத்தில் இருக்கும் வெளிநாட்டவரை நிகிஷா காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பரபரப்பாக பேசியுள்ளனர். இதனை எடுத்து சமூக வலைதளங்களிலும் திருமண தகவல் வைரலானது இதற்கு நிகிஷா கட்டில் விளக்கம் அளித்து இருக்கின்றார். இது பற்றி அவர் பேசும்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில் என் உடன் இருப்பவரை நான் திருமணம் செய்யவில்லை திருமணம் பற்றி வெளியான தகவல்களில் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.

Categories

Tech |