Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் சிட்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடங்கும்.

அதன் பிறகு நவம்பர் 4-ம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு பருவமழையானது வழக்கத்தை விட நடப்பாண்டில் 45 சதவீதம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வெப்பநிலையானது அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் இருக்கும்.

Categories

Tech |